சர்ரு., புர்ருனு., தாறுமாறாக ஓவர் ஸ்பீடில் பேருந்தை இயக்கிய தனியார் பேருந்து ஓட்டுநருக்கு, கல்லூரி மாணவர் ஒருவர் தக்க பாடம் பிறப்பிக்கும் காணொளி ஒன்று, தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அந்த காணொளியில் ஓட்டுனரிடமும், நடத்துனரிடமும் “நீங்கள் என்ன பேருந்து ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள்? ஏன் உங்களுக்கு பொறுமையாக வண்டியை ஓட்ட தெரியாதா? உங்களுக்கு மனைவி, பிள்ளைகள் வீட்டில் இருக்கிறார்களா? இல்லையா? என்று சரமாரியாக கல்லூரி மாணவர் கேள்வி எழுப்பு உள்ளார்.
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து, சேலம் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்றில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மேலும் அந்த கல்லூரி மாணவர், “பேருந்துக்கான நேரம் போனால் என்ன! உயிர் போனால் திரும்ப வருமா? எத்தனை பேர் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியாதா?
அனைவரின் உயிர் பாதுகாப்பு உங்களுடையதுதான் என்று உங்களுக்கு புரிகிறதா? இல்லையா?” என்று கல்லூரி மாணவர் கேள்வி எழுப்பினார்.
இது குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, அனைவராலும் கல்லூரி மாணவர் பாராட்டப்பட்டு வருகிறார்.