CM Stalin: ஃபீபா உலகக்கோப்பை மகுடம் சூடிய அணிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர்

FIFA World Cup Final 2022: ஃபிபா உலகக்கோப்பை தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில்,அர்ஜென்டினா 4-2 ) என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி, மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. FIFA உலகக் கோப்பையில் பிரான்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா கோல் அடித்ததன் மூலம் லியோனல் மெஸ்ஸி மிகப்பெரிய சாதனையை படைத்தார்.  FIFA உலகக் கோப்பை வரலாற்றில் ஒவ்வொரு நாக்-அவுட் போட்டியிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அர்ஜென்டினா நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி படைத்தார்.

உலகம் முழுவதும் இருந்து இந்த கால்பந்து திருவிழா நாயகர்களுக்கு பாராட்டுகள் குவிந்துவரும் நிலையில், இந்தியாவில் இருந்தும், தமிழகத்தில் இருந்தும் கால்பந்து வீரர்களுக்கு பிரத்யேக பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தமிழக முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களும், விளையாட்டு வீரர்களுக்கு தனது மனமார்ந்த பாராட்டை சமூக ஊடகங்கள் வாயிலாக பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

நடப்பு சாம்பியனாக இருந்த பிரான்ஸ் அணியை லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினாவுடன் அணி வீழ்த்தி மகுடம் சூடியது. தோஹாவின் லுசைல் மைதானத்தில் பிரான்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் மெஸ்ஸி புதிய சாதனை படைத்தார்.

2022 உலகக் கோப்பைப் போட்டிகளில், ஒவ்வொரு நாக்-அவுட் சுற்றுகளிலும் மெஸ்ஸி கோல் அடித்தார் என்றா சாதனையைப் படைத்த மெஸ்ஸியின் அதகளம், கால்பந்து உலகக்கோப்பைககன இறுதிப் போட்டியிலும் தொடர்ந்தது.

மெஸ்ஸியின் சாதனையைப் பாராட்டிய தமிழக முதலமைச்சர், மிகவும் சுவாரசியமான போட்டியாக, ரசிகர்கள் அனைவருக்கும் விருந்து படைத்தது இந்த ஆண்டு கால்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டி என்று தனது பாராட்டு டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

போட்டியில் கோப்பையை வென்ற அர்ஜெண்டினாவுக்கும், வெற்றியை சுலபமாக கொடுக்காமல், கடுமையான போட்டியைக் கொடுத்த பிரான்ஸ் கால்பந்து அணிக்கும் தமிழக முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.அதேபோல, மெஸ்ஸி மற்றும் மார்டினெஸுக்குச் சிறப்புப் பாராட்டுகளையும் திரு மு.க ஸ்டாலின் தெரிவித்துக் கொண்டார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.