பொருளாதாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் கலாசார ரீதியான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் ஊடாக இந்திய-இலங்கை உறவுகளை வலுவாக்குதல், இரு நாடுகளினதும் மக்களிடையிலான புரிந்துணர்வை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களிற்காக இந்திய இலங்கை மன்றமானது இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் 1998ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.
இந்நிலையில், கலை கலாசாரம், கல்வி, விவசாயம், ஆராய்ச்சி, விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், சுகாதாரம், சமூகசேவை, அபிவிருத்திக் கற்கைகள் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றை உள்ளடக்கிய துறைகளில் இந்திய இலங்கை மன்றம் திட்ட முன்மொழிவுகளுக்காக அழைப்பு விடுக்கின்றது.
மேலே கூறப்பட்டிருக்கும் விடயங்களில், இந்தியா மற்றும் இலங்கையிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கல்வி மற்றும் ஏனைய ஆராய்ச்சி செயற்பாடுகளை முன்னெடுத்தல், மாணவர்கள், புலமையாளர்கள், கலைஞர்கள், தொழில்நிபுணர்கள் மற்றும் அரங்க கலைஞர்கள் உட்பட்ட தரப்பினருக்கான விஜயங்கள் மற்றும் பரிமாற்றங்கள், கருத்தரங்குகள் மாநாடுகள், கண்காட்சி, திரைப்பட விழா, கலாசார நிகழ்வுகள், மற்றும் பயிலமர்வுகள் போன்றவற்றில் பங்கேற்றல், இவ்வாறான விடயங்களில் இந்திய இலங்கை உறவுகள் குறித்த ஆராய்ச்சி செயற்பாடுகளின் முடிவுகளை பிரசுரித்தல், இந்திய மொழிகளிலுள்ள இலக்கிய படைப்புகளை இலங்கை மொழிகளிலும் அதேபோல இலங்கை மொழிகளில் உள்ளவற்றை இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடல், 2023 மார்ச்சில் நடைபெறவிருக்கும் இந்திய-இலங்கை மன்ற பணிப்பாளர் சபையின் அமர்வின்போது இந்த முன்மொழிவுகள் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதுடன் முன்மொழிவுகளை தனிநபராகவோ, நிறுவனங்களாகவோ அல்லது குழுக்களாகவோ சமர்ப்பிக்கமுடியும்.
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளம் (www..hcicolombo.gov.in) மூலமாக விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து அவற்றை பூரணமாக நிரப்பி திட்டமுன்மொழிவுகளுடன் 2023 ஜனவரி 26ஆம் திகதிக்கு முன்னதாக எமக்கு கிடைக்கக்கூடியவாறு கீழ்க்காணும் எமது முகவரிக்கு அல்லது ஈ-மெயில் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.
INDIA-SRI LANKA FOUNDATION
C/o. High Commission of India
36-38, Galle Road, Colombo 3
Phone: +94 11 2389924
E-mail: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்திய இலங்கை மன்றம்