பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும் ஜனனி செய்த முதல் வேலை!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன்களை கடந்து தற்போது ஆறாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.  21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றனர்.  முதலில் நிகழ்ச்சியை விட்டு ஜி.பி.முத்து வெளியேற அதன்பின் வரிசையாக ஷாந்தி மாஸ்டர், அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ராம், ஆயீஷா போன்றவர்கள் வெளியேற்றிவிட்டனர்.  கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு ஜனனி வெளியேறியது பெரிய டுவிஸ்ட்டாக இருந்தது.  எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கமல் அடிக்கடி சொல்லும் வசனத்திற்கு ஏற்ப கடந்த வார எவிக்ஷன் பொருத்தமாக இருந்தது.

ஏடிகே தான் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று நினைத்து வந்த நிலையில் ஜனனி வெளியேறியிருப்பது ஜனனி ஆர்மிக்கு அதிர்ச்சியளித்துள்ளது.  இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் மற்றும் தொகுப்பாளினியாக இவர் பிக்பாஸ் வீட்டில் வந்ததிலிருந்து பலரது க்ரஷ் லிஸ்டிலும் சேர்க்கப்பட்டார்.  ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவர் செய்யும் செயல்கள் மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.  அமுதவாணனின் கைப்பாவையாக செயல்படுவது, புறம் பேசுவது, தற்பெருமை பேசுவது என இவர் மீது பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டது இருப்பினும் சில ரசிகர்கள் இவரை புகழ்ந்து கொண்டுதான் இருந்தனர்.  70 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து பார்வையாளர்கள் மத்தியில் ஜனனி பிரபலமாகி இருக்கிறார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது ஜனனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களின் தொகுப்பை பகிர்ந்து கொண்டதுடன் சில வரிகளையும் எழுதியுள்ளார்.  அதில், ‘நான் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது என்னை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் நன்றி, உங்கள் வாக்குகளின் மூலம் எனக்கு ஊக்கமளித்தீர்கள்.  இந்த நாட்களில் உங்கள் எதிர்பார்ப்புகளை என்னால் பூர்த்தி செய்ய முடியாததற்கு என்னை மன்னிக்கவும், இந்த நிமிடம் முதல் எல்லா வழிகளிலும்  உங்களை நாம் மகிழ்விப்பேன்.  மிக்க நன்றி” என்று எழுதியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.