கதக்: பள்ளியில் இரு ஆசிரியர்களுக்கு இடையிலான சண்டையை தடுக்க வந்த 10 வயது மாணவனை முதல் மாடியில் இருந்து ஆசிரியர் தூக்கி வீசியதில் படுகாயமடைந்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் ஹாட்லி கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில் ஆசிரியர்களாக உள்ள முத்தப்பா மற்றும் கீதா ஆகியோர்கள் இடையே நேற்று சண்டை ஏற்பட்டுள்ளது. முத்தப்பா கீதாவை அங்கிருந்த மண்வெட்டியை கொண்டு தாக்கியுள்ளார்.
அப்போது அதே பள்ளியில் 4வது வகுப்பு படித்து வரும் ஆசிரியர் கீதாவின் 10 வயது மகன் பரத், முத்தப்பாவை தடுக்க முயற்சித்துள்ளார். கோவத்தின் உச்சியில் இருந்த முத்தப்பா, பரத்தை முதல் மாடியில் இருந்து தூக்கி கீழே எரிந்துள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவன் பரத், கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். தலைமறைவான முத்தப்பாவை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.