'யார் எடுத்தீங்களோ அத நீங்களே கொடுத்துடுங்க' – நகையை நாசுக்காக மீட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்

புதுப்பேட்டை ஆரம்ப சுகாதார மையத்தில் பெண் அலுவலக உதவியாளரிடம் திடுபோன தாலி சங்கிலியை 24 மணி நேரத்தில் மீட்ட போலீசார், உரியவரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை எழும்பூர் புதுப்பேட்டை பகுதியில் உள்ள பெருநகர சென்னை ஆரம்ப சுகாதார மையத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருபவர் உஷா. இவர், நேற்று முன் தினம் இரவு மருத்துவமனையில் ஒய்வு எடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது உஷா கழுத்தில் இருந்த தாலி சங்கிலி திருடு போனதாக எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
image
இந்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் இசக்கி பாண்டியன் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை செய்து, தாலி சங்கிலியை யாரவது எடுத்திருந்தால் அதை அறைக்குள் வைத்து விட்டுச் செல்லுங்கள். மாறாக நகையை எடுத்து வைத்திருப்பவர்கள் யாரென கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வேலையை இழக்க நேரிடும் என்று சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்.
image
இதையடுத்து தாலி சங்கலியை எடுத்தவர்கள் அதை யாருக்கும் தெரியாமல் அறையில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்த மறுநாள் அந்த அறையில் வந்து பார்த்தபோது அறைக்குள் தாலி சங்கலி இருந்ததைக் கண்ட போலீசார், அதை எடுத்து உஷாவிடம் ஒப்படைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.