ஸ்ரீசூக்த ஹோமம்: நடுநாட்டு திருப்பதியில் தொலையாத நிதியமும் தாழாத கீர்த்தியும் அருளும் மஹாஹோமம்!

திண்டிவனம், நல்லியக்கோடன் நகர் ஸ்ரீஅலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் (1-1-2023) புத்தாண்டு நாளில், வைகுண்ட ஏகாதசிக்கு முந்திய புண்ணிய வேளையில், ஞாயிற்றுக் கிழமை வளர்பிறை தசமி நாளில் அசுவினி நட்சத்திர வேளையில், காலை 10 மணி முதல் 12 மணி வரையில் ஸ்ரீசூக்த ஹோமம் நடைபெற உள்ளது.

திருமகள்

அஷ்ட ஐஸ்வர்யங்களை மட்டுமில்லாமல் குடும்ப நிம்மதி, ஒற்றுமை யாவும் அருள்பவளும் மகாலட்சுமியே. மகாலட்சுமியை வழிபடும் முறைகளில் மிகச் சிறந்தது ஸ்ரீசுக்த மந்திர பாராயணம்.

திருமகள் சாந்தமும் கருணையும் கொண்டவள். தன தான்ய செல்வங்களைப் பெருக்கித் தருபவள். தரித்திரத்தை அடியோடு விரட்டி நவநிதிகளை குடியேறச் செய்பவள். இவள் அருள் இருந்தால் எல்லாவற்றிலும் ஜெயம் பெறலாம் என்கின்றன புராணங்கள். சித்தி, புத்தி, பலம், போகம், முக்தி தருபவள் லட்சுமி என வேதங்கள் கூறும்.

அனைவருக்கும் நன்மை தருபவள் என்று அதர்வன வேதம் லட்சுமியைப் போற்றும். வைகுந்தத்தில் ரமாதேவி, சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமி, பாதாள லோகத்தில் நாகலட்சுமி, பிரம்ம லோகத்தில் பிங்களா, ராஜாக்களிடம் ராஜ லட்சுமி, விலங்குகளிடத்தில் சோம லட்சுமி, புண்ணியவான்களிடம் ப்ரீதிலட்சுமி, வேதாந்திகளிடம் தயாலட்சுமி, ஹோமங்களில் இவள் பூரண லட்சுமி என வணங்கப்படுகிறாள் என்றும் புராண நூல்கள் கூறுகின்றன.

பத்மா, கமலா, பத்மப்பிரியா, பத்மசுந்தரி, விஷ்ணுப்பிரியா, திருமகள், அலைமகள், ஐஸ்வர்யா, வைஷ்ணவி, நாராயணி, பார்கவி, ஜலஜா, மாதவி, சுஜாதா, ஸ்ரேயா, ஸ்ரீநிதி, ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என பல்வேறு திருநாமங்களால் போற்றப்படும் திருமகள் மங்கலப் பெண்களின் துணையாக இருப்பவள். ஒவ்வொரு திதிக்கும் ஒரு திருமகளென நமது சாஸ்திரங்கள் வகுத்து அதன்படி வழிபடவும் சொல்லி வந்துள்ளன. அதன்படி…

மகாலட்சுமி

பிரதமை திதியில் ஆதிமகாலட்சுமி வழிபாடு, துவிதியை திதி – தனலட்சுமி, திருதியை திதி -வீரலட்சுமி, சதுர்த்தி திதி – கஜலட்சுமி, பஞ்சமி திதி – சந்தானலட்சுமி, சஷ்டி திதி -தான்யலட்சுமி, சப்தமி திதி – விஜயலட்சுமி, அஷ்டமி திதி – வித்யாலட்சுமி, நவமி திதி – சௌபாக்கியலட்சுமி, தசமி திதி – அமிர்தலட்சுமி, ஏகாதசி திதி – கீர்த்திலட்சுமி, துவாதசி திதி – சாம்ராஜ்ஜிய லட்சுமி, திரயோதசி திதி – ஆரோக்கியலட்சுமி, சதுர்தசி திதி -ஞானலட்சுமி, பௌர்ணமி திதி – ஐஸ்வரிய லட்சுமி, அமாவாசை திதி -காருண்யலட்சுமி என வழிபடுவது நம் வழக்கம்.

தாலி வரத்தை அருள்பவள் வரலட்சுமி, சந்தான வரத்தை தருபவள் சந்தான லட்சுமி இப்படி சகலத்தையும் அருளும் திருமகளுக்கு ஏற்ற வழிபாடு ஸ்ரீசூக்த ஹோமம். இந்த புகழ்பெற்ற மஹாஹோமம் திண்டிவனம், நல்லியக்கோடன் நகர் ஸ்ரீஅலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் (1-1-2023) புத்தாண்டு நாளில், வைகுண்ட ஏகாதசிக்கு முந்திய புண்ணிய வேளையில், ஞாயிற்றுக் கிழமை வளர்பிறை தசமி நாளில் அசுவினி நட்சத்திர வேளையில், காலை 10 மணி முதல் 12 மணி வரையில் ஸ்ரீசூக்த ஹோமம் நடைபெற உள்ளது.

அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாசப்பெருமாள் பெருமாள்

அபூர்வ மலர்கள், விசேஷ சமித்துகள், சுகந்த பரிமள திரவியங்கள் கொண்டு செய்யப்படும் இந்த ஹோமத்தால் மகாலட்சுமி மகிழ்வாள் என்றும் அதனால் நீங்கள் வேண்டி விரும்பும் சகல ஐஸ்வர்யங்களையும் அளிப்பாள் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ஆரோக்கியம், திருமண வரம், மகப்பேறு, தனம், தான்யம், மகப்பேறு, கால்நடைகள், நிலம், சௌபாக்கிய வாழ்வு, அதிகாரம், பதவி, வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, செல்வாக்கு, சொல்வாக்கு, வெளிநாட்டு வாய்ப்பு, விரும்பிய வேலை யாவும் அருள்வாள் என்கின்றன ஆன்மிக நூல்கள்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

புகழ்மிக்க இந்த ஹோமத்தை சக்தி விகடன் வாசகர்களாகிய உங்கள் குடும்ப க்ஷேமத்துக்காகவும் உங்கள் சுற்றத்தார் வளத்துக்காகவும் திண்டிவனம் நல்லியக்கோடன் நகர் அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் நிர்வாகத்துடன் இணைந்து சக்தி விகடன் ஸ்ரீசூக்த ஹோமத்தை நடத்த உள்ளது. சக்தி விகடன் வாசகர்களாகிய உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் சகல சௌபாக்கியங்களும் வேண்டி இந்த ஹோமத்தை நடத்த இருக்கிறோம். திண்டிவனம், நல்லியக்கோடன் நகர் ஸ்ரீஅலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் மிகப் பழைமையானது. சங்ககாலம் தொட்டே இருந்து வருவது. அக்காலங்களில் திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்தே வழிபாடும் பரிகாரமும் செய்து வருவது வழக்கமாம்.

நல்லியக்கோடன் நகர்

திண்டிவனம், நல்லியக்கோடன் நகர் ஸ்ரீஅலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் (1-1-2023) புத்தாண்டு நாளில், வைகுண்ட ஏகாதசிக்கு முந்திய புண்ணிய வேளையில், வளர்பிறை தசமி நாளில் அசுவினி நட்சத்திர வேளையில், ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரையில் ஸ்ரீசூக்த ஹோமம் நடைபெற உள்ளது. நல்லியக்கோடன் எனும் சங்க கால மன்னனின் பக்திக்கு மெச்சிய திருமால், இந்த ஆலயத்தில் அவனது குறைகளை நீக்கி வெற்றியை அளித்தாராம். இங்கு அலமேலு சமேத ஸ்ரீனிவாசப் பெருமானாக எழுந்தருளி இருக்கும் திருமால் கேட்ட வரங்களை அருளும் வரப்ரசாதியாக வீற்றிருக்கிறார். இங்கு திருமகள் ஸ்ரீஅலமேலு மங்கையாக எழுந்தருளி இருக்கிறார். அவரை எண்ணி இந்த ஸ்ரீசூக்த ஹோமத்தில் கலந்து கொண்டால் சகல வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீசூக்த ஹோமம்

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.