டெல்லி: கபடி உள்ளிட்ட இந்திய விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார். டெல்லியில் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, பாஜக எம்.பி.க்கள் தாங்கள் நடத்தும் கூட்டங்களில் தினைப் பொருட்கள் குறித்து பிரச்சாரம் செய்யலாம்.
தானியங்களின் நுகர்வு அதிகரிப்பது விவசாயிகளுக்கு நிதி உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார். அதே போல் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதை பாஜக எம்.பி.க்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, கபடி உள்ளிட்ட இந்திய விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.