விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே மாரங்கியூர் கிராமத்தில், இந்திராணி (75) என்ற மூதாட்டி காணாமல் போன வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நகைக்காக அதே கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர் (23) கொலை செய்து வீட்டிலேயே புதைத்தது தெரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
