வேலையில்லாதவர்கள் 13,417 பேர் தற்கொலை

புதுடெல்லி: மக்களவையில் அமைச்சர் நித்யானந்த் ராய்  எழுத்து மூலம் அளித்த பதில்: கடந்த ஆண்டு 42,004 தினக்கூலிகள், 23,179 இல்லத்தரசிகள் தற்கொலை செய்து கொண்டனர். தினமும்   115 தினக்கூலிகள், 63 இல்லத்தரசிகள் தற்கொலை செய்து கொண்டனர். 20,231 சுயதொழில் செய்பவர்கள், 15,870 சம்பளக்காரர்கள், 13,714 வேலையில்லாதவர்கள், 13,089 மாணவர்கள், 12,055 வணிகர்கள், 11,431  தனியார் துறை நிறுவன ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

விவசாயத் துறையில் மட்டும் விவசாயம் செய்வோர் 10,881 பேர், 5,563 விவசாய தொழிலாளர்கள், 5,318 விவசாயிகள் , சொந்த நிலத்தில் விவசாயம் செய்யும் 4,806 பேர், குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் 512 பேர்  தற்கொலை செய்து கொண்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.