கடலூர் மாவட்டத்தில் தொழிலாளியை வழிமறித்து அறிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் கொக்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் சூளை தொழிலாளி முருகன் (35). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கருணாகரன் என்பவருக்கும் ஆறு மாதங்களுக்கு முன்ப ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் முருகன் சூளை உரிமையாளர் சண்முகத்துடன் அங்கு செட்டிபாளையம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது அவரை வழிமறத்த கருணாகரன் திடீரென அறிவாளால் முருகனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த முருகனை அவ்வகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முருகன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சண்முகம் கொடுத்த புகாரின் அடிப்படையில், புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை வெட்டிய கருணாகரனை கைது செய்தனர்.
பின்பு நீதிமன்றத்தில் கருணாகரனை ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.