பதில் சொல்லாத எலான் மஸ்க்| Dinamalar

புதுடில்லி: ‘டுவிட்டர்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து விலகுவது குறித்து, எலான் மஸ்க் நடத்திய வாக்கெடுப்பில், அவர் பதவி விலகுவதற்கு ஆதரவாக, பெரும்பான்மையானவர்கள் வாக்களித்துள்ளனர்.

வாக்கெடுப்பு

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை தொடர்ந்து வகிக்கவா அல்லது வேண்டாமா என்பது குறித்து, தன்னை பின்பற்றும் 12.2 கோடி பேரிடம்,
வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினார், அந்நிறுவனத்தின் புதிய தலைவரான எலான் மஸ்க்.மேலும், இந்த வாக்கெடுப்பின் முடிவுக்கு கட்டுப்படுவதாகவும் அவர் உறுதி கூறி
இருந்தார்.வாக்கெடுப்பு முடிவடைந்த நிலையில், அவர் பொறுப்பிலிருந்து விலகலாம் என 57.5 சதவீதம் பேர் வாக்களித்து உள்ளனர்.

ஆனால், வாக்கெடுப்புக்கு பின்னர், தன்னுடைய முடிவு குறித்து எலான் மஸ்க் இன்னும் எதுவும் அறிவிக்காமல் உள்ளார்.அதேசமயம், பயனர் ஒருவரின் பதிவுக்கு பதிலளித்துள்ளார். ‘டுவிட்டரில் சந்தா செலுத்தி ‘புளூடிக்’ பெற்றவர்கள் தான், நிறுவனத்தின் கொள்கை சார்ந்த முடிவுகளில் வாக்களிக்க முடியும்’ என்று வந்திருந்த பயனர் ஒருவரின் பதிவுக்கு, ‘நல்ல கருத்து இது. டுவிட்டர் இந்த மாற்றத்தை மேற்கொள்ளும்’ என தெரிவித்து
உள்ளார்.ஆனால், பதவி விலகுவது குறித்து நேரடியாக எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.

எலான் மஸ்க் பதவி விலகுவதற்கு போலி கணக்குகள் வாயிலாக பலர் ஆதரவு தெரிவித்திருக்கக் கூடும். எனவே, உறுதி செய்யப்பட்ட கணக்கை கொண்ட புளூடிக் சந்தாதாரர்கள் வாக்கை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என, எலான் மஸ்க் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.அதேசமயம், எதிர்த்தரப்பினர் எலான் மஸ்க், டிரம்ப் இருவருமே டுவிட்டரை பயன்படுத்தி, தங்களை முன்னிலைபடுத்திக் கொள்வதாகவும்; எப்போதும் பேசுபொருளாக அவர்கள் இருக்க, டுவீட்டுகளை பயன்படுத்துகின்றனர் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள்.

என்ன முடிவு

‘டெஸ்லா நிறுவன பங்குகளை விற்கலாமா, டிரம்பை மீண்டும் சேர்க்கலாமா’ என்பது உள்ளிட்ட பலவற்றுக்கு வாக்கெடுப்பு நடத்துவதாக கூறி, எலான் மஸ்க், தன்னை பின்பற்றும் கோடிக்கணக்கான
பேரை பயன்படுத்தி, பிரபலமடைந்து கொள்கிறார் என்கிறார்கள், எதிர்தரப்பினர்.டுவிட்டர் பயனர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து விட்டனர். எலான் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பது இனி மேல்தான் தெரியவரும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.