வளர்ச்சிக்கண்ட ஊடக பாரம்பரியத்திற்காக, சர்வதேச மட்டத்திலான  ஊடக நிறுவனம் ஸ்தாபிக்கப்படும்

அறிவே மூலதனமாக மாறும் உலகில் ஊடகவியலாளர்களுக்கு அகநிலை மற்றும் பிற சமூக , பொருளாதார, கலாசார விடயங்கள் தொடர்பில் அதிக அறிவைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும் போது சமூகத்தை புத்திதெளிவைக்கொண்ட மேம்பட்ட சமூகமாக ஆக்கும் ஆற்றல் ஊடகவியலாளர்களுக்கு கிடைக்கும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தொழில் ரீதியிலான ஊடக கலாச்சாரத்தை நிலை நிறுத்துவதற்காக சகல ஊடகவியலாளர்களும் அறிவில், ஆற்றலில் மற்றும் எண்ணக்கரு என்ற ரீதியில் மேம்படுத்தும் நோக்கில் வெகுஜன ஊடக அமைச்சு நடைமுறைபடுத்திவரும் அசிதிசி ஊடகவியலாளர் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று (21) காலை வெகுஜன ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது .

வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மேம்பட்ட ஊடகப் பாரம்பரியத்திற்காக பல்வேறு துறைகளில் நிபுணத்துவத்தை கொண்டவர்களைக்கொண்டு சர்வதேச தரத்திலான சுயாதீன ஊடக நிறுவனம் ஒன்று அடுத்த வருடத்தில் அமைக்கப்படும். இது தொடர்பில் தற்பொழுது சட்டமூல வரைவு திணைக்களத்தில் சட்ட மூலம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

21 ஆவது நூற்றாண்டில் சவால்களை எதிர்கொள்ளும் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி கற்கைநெறி மூலம் தமது தொழில் ஆற்றலை மேம்படுத்தி கொள்வதற்கு வசதிகளை செய்தல் மற்றும் ஊக்குவித்தல் ஆகியனவே எசிதிசி ஊடக புலமைப்பரிசில் வேலைத் திட்டத்தின் நோக்கமாகும்.

வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளரின் மூலம் நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவின் மூலம் விண்ணப்பதாரிகள் நேர்முக பரீட்சைக்கு உட்படுத்தி பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இம்முறை இந்த புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பித்த ஊடகவியலாளர்கள் மத்தியில் குறிப்பிட்ட தகுதிகளை கொண்டிருந்த அனைவருக்கும் புலமைபரிசில்கள் வழங்குவதற்கு வெகுஜன ஊடக அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டது.

இதற்கமைவாக இம்முறை 49 ஊடகவியலாளர்களுக்கு புலமைபரிசில்கள் வழங்கும் நிகழ்வு இன்று (21) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட அரச தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன  உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.