டெல்லி: 2022 நவம்பர் வரை நாடு முழுவதும் உள்ள அகல ரயில் பாதைகளில் 83% ரயில்வே பாதைகள் மின்மயம் செய்யப்பட்டுள்ளது என ஒன்றிய ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 143 மெகாவாட் சூரிய ஒளி மின் நிலையங்கள், 103 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
