பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பிறகு வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்திருக்கிறார் விஜய். தில்ராஜு தயாரிக்க தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் படம் வெளியாகவுள்ளது. பொங்கலுக்கு படம் வெளியாகவிருக்கும் சூழலில் வாரிசுடன் அஜித் நடித்திருக்கும் துணிவு படமும் வெளியாகிறது.
இதனால் விஜய், அஜித் ரசிகர்கள் மத்தியில் இப்போதே சமூக வலைதளங்களில் கருத்து மோதல் எழுந்திருக்கிறது. இதனிடையே வாரிசு படத்தில் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தச் சூழலில் படத்தின் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சி 24ஆம் தேதி நடக்கவிருக்கிறது. நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிக்காக மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு எப்போதும் தனித்து தெரியும் என்பதால் இந்த நிகழ்ச்சியில் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே எழுந்துள்ளது. குறிப்பாக பல வருடங்கள் கழித்து அஜித்துடன் களமிறங்குவதலும், விஜய்தான் நம்பர் 1 என்று தில்ராஜு கூறியிருப்பது சர்ச்சை ஆகியிருப்பதாலும் விஜய் எவ்வாறு பேசப்போகிறார் என்ற ஆவல் பலரிடம் உருவாகியுள்ளது.
#VarisuAudioLaunch pic.twitter.com/tA0bNOfm6g
— Vijay is Here (@Vijay_is_herex) December 21, 2022
இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், “வாரிசு இசை வெளியீடு 24 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. பட்டாசுக்கடை, பூக்கடை போன்ற அதிரடி அரசியல் பஞ்ச் பேசுவாரா அல்லது கம்முனு இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும் என்று பம்முவரா?
வாரிசு இசை வெளியீடு 24 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
பட்டாசுக்கடை, பூக்கடை போன்ற அதிரடி அரசியல் பஞ்ச் பேசுவாரா அல்லது கம்முனு இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும் என்று பம்முவரா?
ரெய்டிற்கு பிறகு.. ஆடியோ லாஞ்ச் அரசியல் பேச வேண்டாமென முடிவா? புலி பாயுமா? பதுங்குமா?
— Blue Sattai Maran (@tamiltalkies) December 21, 2022
ரெய்டிற்கு பிறகு.. ஆடியோ லாஞ்ச் அரசியல் பேச வேண்டாமென முடிவா? புலி பாயுமா? பதுங்குமா” என பதிவ் இட்டுள்ளார். அவரது இந்த ட்வீட் சமூகவலைதளங்களில் வைரலாகி விவாதத்தை கிளப்பியுள்ளது.