ராம்கர், ஜார்க்கண்டில், பள்ளி ஒன்றில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இரண்டு மாணவர்களை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடக்கிறது. இங்கு, ராம்கர் மாவட்டத்தில் உள்ள பர்குண்டாவில், சி.பி.எஸ்.இ., பள்ளி ஒன்று உள்ளது.
இதில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன், நேற்று முன் தினம் வகுப்பறையில் வித்தியாசமாக நடந்துகொண்டதை கவனித்த ஆசிரியர், அவனது புத்தகப் பையை சோதனையிட்டு உள்ளார். அதில், நாட்டுத் துப்பாக்கி ஒன்று இருந்தது தெரியவந்தது.
உடனே, அவர் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார், அம்மாணவனிடம் விசாரித்த போது, எட்டாம் வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவனுக்காக துப்பாக்கியை எடுத்து வந்ததாக அவன் தெரிவித்தான்.
இதையடுத்து, போலீசார் இருவரையும் பிடித்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement