7வது ஊதியக்குழு அகவிலைப்படி நிலுவைத் தொகை: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. 18 மாத அரியர் தொகை பற்றிய இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 18 மாத நிலுவைத் தொகையை மத்திய ஊழியர்கள் நீண்டகாலமாக கோரி வருகின்றனர். தற்போது இது குறித்து அரசிடம் இருந்து பெரிய அறிக்கை வந்துள்ளது. 18 மாத நிலுவைத் தொகை குறித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மாநிலங்களவையில் விளக்கம் அளித்துள்ளார். டிஏ நிலுவைத் தொகை குறித்து ஊழியர்கள் முன்வைத்த கோரிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டதாக அவரது அறிக்கையில் தெரிகிறது.
நிதியமைச்சரை சந்திக்க ஊழியர் அமைப்புகள் கோரிக்கை
கேள்வி நேரத்தின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நிதித்துறை அமைச்சர், ஊழியர்களின் அகவிலைப்படி நிலுவைத் தொகை ஏன் விடுவிக்கப்படவில்லை என்பதை விளக்கினார். முடக்கப்பட்ட 18 மாத நிலுவைத் தொகையை வழங்கவேண்டும் என ஊழியர் அமைப்புகளிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிதியமைச்சரை சந்திக்க வேண்டும் என ஊழியர் சங்கங்களும் கோரிக்கை விடுத்திருந்தன.
அரசு நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது
கொரோனா தொற்றுநோய் காரணமாக 3 தவணை அகவிலைப்படியை வெளியிட வேண்டாம் என்று மத்திய அரசு முடிவு செய்ததாக பங்கஜ் சவுத்ரி மாநிலங்களவையில் தெரிவித்தார். மேலும், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அரசாங்கம் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் சபையில் தெரிவித்தார். மக்களின் வாழ்வாதாரம் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருக்க, அரசு பல்வேறு நலத்திட்டங்களில் முதலீடு செய்துள்ளது.
செப்டம்பரில் டிஏ 38 சதவீதமாக அதிகரித்துள்ளது
இந்த காரணங்களால்தான் அரசு அரியர் தொகையை விடுவிக்கவில்லை என்று அவர் கூறினார். மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த பிறகும், நிதி நெருக்கடி காணப்படுவதாகவும், அதனால்தான் மத்திய ஊழியர்களின் நிலுவையில் உள்ள டிஏ வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 2022 செப்டம்பரில் அரசாங்கம் அகவிலைப்படியை 38 சதவீதமாக அதிகரித்தது குறிப்புடத்தக்கது.
ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை முடக்கப்பட்ட அகவிலைப்படியின் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசு ஊழியர்களால் நீண்ட நாட்களாக முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கு முன்பும் இது தொடர்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.