கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவி்ல் தலையெடுக்க தொடங்கிய கொரோனா எனும் கொடிய வைரஸ் மெல்ல, மெல்ல பல்வேறு நாடுகளுக்கு பரவ தொடங்கி, ஒட்டுமொத்த உலகையே உலுக்கியது. பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில், இத்தாலி, ரஷியா உள்ளிட்ட நாடுகளில் லட்சக்கணக்கான உயிர்களை கொரோனா பலி கொண்டது.
அலை 1,2,3 என்று அடுத்தடுத்து எழுந்த அலைகளில் கொத்து கொத்தாக உயிர்கள் பறிபோகின. இதனால் அகிலமெங்கும் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்க, நாடு முழுவதும் பொதுமுடக்கம் (லாக்டவுன்) அமல்படுத்தப்பட்டும், தடுப்பூசி செலுத்தப்பட்டும் குடிமக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. கொரோனாவின் கோர பிடியில் சிக்கி, கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் அவஸ்தைக்கு பிறகு 2021 இறுதியில் உலக நாடுகள் ஒரு வழியாக இயல்பு நிலைக்கு திரும்பின.
இந்த நிவையில், ஓராண்டு இடைவெளிக்கு பிறகு தற்போது 2023 ஆங்கில புத்தாண்டு பிறப்புக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சீனாவில் மீண்டும் பரவ தொடங்கி உள்ள உருமாறிய ஓமைக்ரான் வகை கொரோனா (BF -7) உலக மக்களின் தூக்கத்தை மீண்டும் கலைத்து, அவர்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
3 மாதங்களுக்கு 3 அலைகளில் கொரோனா தாக்கும்; சீனாவில் ரெட் அலர்ட்.!
அதுவும் இனிவரவிருக்கும் நாட்களில் சீனாவில் இந்த கொரோனாவின் தாக்கமும், அதன் விளைவாக நாள்தோறும் நிகழ உள்ளதாக கணிப்பட்டுள்ள உயிரிழப்புகளும் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டு மக்களை பீதி உறைய செய்துள்ளது.
சீனாவின் மிகப்பெரிய நகராகும், உலக அளவிலான வர்த்தக மையமாகவும் திகழும் ஹாங்காய் உள்ளிட்ட அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் அதிவேகமாக பரவிவரும் கொரோனாவால் இனிவரும் நாட்களில் நாள்தோறும் ஒரு மில்லியன் ( 10 லட்சம்) பேர் தொற்றுக்கு ஆளாவார்கள் எனவும், இதன் விளைவாக தினமும் அங்கு 5,000 பேர் வரை மரணம் அடையக்கூடும் எனவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த கணிப்புப்படி நிகழந்தால், அது இதுநாள்வரை சீனா சந்தித்திராத அதிபயங்கர கொரோனா மரணங்களாக இருக்கும் என்றும் அந்த தகவல் மேலும் அதிர்ச்சியூட்டும் விதத்தில் அமைந்துள்ளது.
ஆசியாவை ஆட்டிபடைத்த ஃப்ரெஞ்ச் சீரியல் கில்லர் விடுதலை.!
சீனாவில் தற்போது வேகம் எடுத்துள்ள கொரோனா ஜனவரி மாத இறுதியில் உச்சத்தை அடையும் என்றும், அப்போது அன்றாட கொரோனா பாதிப்பு 3.7 மில்லியனாக (37 லட்சம்) இருக்கும் என்றும், இதுவே மார்ச் மாதம், சீனாவில் கொரோனா தினசரி பாதிப்பு 4.2 மிில்லியன் (42 லட்சம்) ஆகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
லண்டனை சேர்ந்த Airfinity Ltd., தரவு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அதிர்ச்சி தகவலால் 140 கோடி மக்கள்தொகை கொண்ட உலகின் மிகப்பெரிய நாடான சீனா, ஆங்கில புத்தாண்டை அச்சத்துடனே எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 22 ஆம் தேதி, 2023 சீன புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.