ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை! சடலங்கள் அருகே கிடந்த ஒரு பொருள்


இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் வீட்டில் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சடலமாக மீட்பு

பெங்களூரில் வசித்து வந்தவர் மருத்துவ சத்யநாராயணா. இவர் மனைவி யசோதா (70) தம்பதிக்கு அபர்னா, சுமன் (41) என்ற மகள்களும், நரேஷ் (36) என்ற மகனும் இருந்தனர்.
சத்யநாராயணா இரண்டாண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார்.

அபர்னாவுக்கு திருமணமாகி வேறு பகுதியில் கணவருடன் வசிக்கிறார்.
மற்ற மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் யசோதா, சுமன், நரேஷ் ஆகிய மூவரும் நேற்று முன்தினம் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பொலிசார் கூறுகையில், சுமனுக்கு மாப்பிள்ளை தேடியும் கிடைக்காமல் இருந்து வந்தது, அவருக்கு திருமணம் நடந்தால் நரேஷுக்கும் திருமணம் நடக்கும் என்ற நிலை இருந்தது.
இந்த நிலையில் போன் செய்தால் வீட்டில் யாருமே எடுக்கவில்லை என அபர்னா தாயார் வீட்டிற்கு வந்தார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை! சடலங்கள் அருகே கிடந்த ஒரு பொருள் | Bangalore Family Mass Suicide Investigation

Special Arrangement

உடல்களுக்கு அருகே மாத்திரைகள்

அப்போது வீட்டிற்குள் யசோதா, சுமன், நரேஷ் ஆகிய மூவரும் சடலமாக கிடந்துள்ளனர்.
தகவலின் பேரில் நாங்கள் அங்கு சென்று சடலங்களை கைப்பற்றினோம்,
இது தவிர ஒரு கடிதத்தையும் கைப்பற்றியுள்ளோம்.

இதில் தங்கள் இறப்புக்கு யாரும் காரணமல்ல என்று எழுதப்பட்டுள்ளது. மூவரும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தனர். உடற்கூறாய்வு அறிக்கை வந்த பின்னர்தான் கொலையைா? தற்கொலையா என்கிற முடிவுக்கு வர முடியும். இவர்கள் உடல்களின் அருகில் மாத்திரைகள் சில கிடந்துள்ளன.

இந்த மாத்திரைகளை உட்கொண்டு கூட அவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம்.
நரேஷ் நண்பர்கள் சிலர் சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என அபர்னா புகாரில் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.