ஜன் ஆக்ரோஷ் யாத்திரை நிறுத்தம்: உலகம் முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு பாரதிய ஜனதா கட்சி தனது ஜன் ஆக்ரோஷ் யாத்திரையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளரும், ராஜஸ்தான் பொறுப்பாளருமான அருண் சிங் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, டிசம்பர் 1-ஆம் தேதி ஆம் தேதி முதல் ராஜஸ்தானில் “ஜன் ஆக்ரோஷ் யாத்திரை”யை பாஜக மேற்கொண்டு வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அதனை நிறுத்த பாஜக முடிவு செய்துள்ளதாக அருண் சிங் தெரிவித்துள்ளார். அதே சமயம் காங்கிரசை குறிவைத்து ராகுல் காந்தியும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். குறைந்தபட்சம் கோவிட் வழிகாட்டுதல்களையாவது அவர்கள் பின்பற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
ராஜஸ்தானில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் தலைமையிலான அசோக் கெலாட் அரசுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி ஜன் ஆக்ரோஷ் யாத்திரையை தொடங்கியது. அது இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் இந்தப் பயணத்தை அக்கட்சியின் தலைவர் ஜேபி நட்டா டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கினார். இந்தப் பயணத்தின் கீழ், 75000 கிலோமீட்டர் தூரத்தை கடக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஜன் ஆக்ரோஷ் யாத்திரையின் போது 2 கோடி பேருடன் தொடர்பு கொள்ளவும், இந்த யாத்திரையின் போது கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் பணி மேற்கொள்ளப்படும் என்றும் பா.ஜ.க முடிவு செய்திருந்தது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ராஜஸ்தானில் பாஜக தனது ஜன் ஆக்ரோஷ் யாத்திரையை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
We halted our ‘Jan Aakrosh Yatra’ in Rajasthan…Rahul Gandhi should follow Covid19 guidelines. The safety of people is most important: BJP MP Arun Singh, at Parliament in Delhi pic.twitter.com/IRDgtew1CO
— ANI (@ANI) December 22, 2022
இதுக்குறித்து அருண் சிங் பேசுகையில், “பாஜகவை பொறுத்தவரை எப்பொழுதும் முதலில் நாடு மற்றும் பொதுமக்கள் நலன் தான் முக்கியம். அதன் பிறகு தான் அரசியல். எங்களுக்கு பொதுமக்களின் பாதுகாப்பும், அவர்களின் உடல் நலமும் தான் முதன்மையானது எனக் கூறிய அவர், காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரையை குறிவைத்து, அரசியல் லாபத்திற்காக மக்களின் உயிருடன் காங்கிரஸ் விளையாடுகிறது. பாரத் ஜோடோ யாத்திரை ஒத்திவைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா தோல்வியடைந்த நிகழ்ச்சி என்று வர்ணித்த அருண் சிங், இது காலை-மாலை நடைபயணம் தவிர வேறில்லை என்றார். காங்கிரஸ் தனது அரசியலுக்காக மக்களுடன் விளையாடக் கூடாது எனவும் கூறினார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு நேற்று (புதன்கிழமை) ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இன்று பிரதமர் மோடியும் கொரோனா தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை நடத்த உள்ளார். கொரோனா பரவுவதைத் தவிர்க்க மக்கள் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று மாண்டவியா கூறியிருந்தார். வரவிருக்கும் பண்டிகைகள் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களைக் கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிவது மற்றும் தடுப்பூசி போடுவது குறித்தும் ஆலோசனை வழங்கினார் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஏற்படுத்தவும் மாநிலங்களை அவர் கேட்டுக் கொண்டார்.