விஜய் மற்றும் வம்சியின் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் தான் வாரிசு. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாவதால் நாளுக்கு நாள் படத்தை பற்றிய பேச்சுக்கள் தான் அதிகரித்த வண்ணம் உள்ளன. விஜய்யின் ஜோடியாக ராஷ்மிகா, இசையமைப்பாளராக தமன் என விஜய் புத்தம் புதிய கூட்டணியுடன் களமிறங்குவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் இப்படம் வழக்கமான விஜய் படங்களை போல இல்லாமல் சற்று மாறுபட்டு வித்யாசமாக இருக்கும் என்றும், பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் பட விஜய்யை நாம் வாரிசு படத்தில் பார்க்கலாம் என்றும் தகவல் வந்துள்ளது.
Thalapathy vijay: தளபதி 68 படத்தில் இப்படி ஒரு சர்ப்ரைஸ் இருக்கா ? ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்..!
இதன் காரணமாக இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் இப்படத்திலிருந்து விஜய் பாடிய ரஞ்சிதமே பாடல் வெளியாகி மாஸ் ஹிட்டடித்தது. இதையடுத்து சிம்பு பாடிய தீ தளபதி பாடல் வைரல் ஹிட்டானது.
சில தினங்களுக்கு முன்பு அம்மா செண்டிமெண்ட் பாடல் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24 ஆம் தேதி மிகப்பிரமாண்டமாக நடைபெற இருக்கின்றது. இதனை காண கோடானகோடி ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தை பற்றிய மேலும் ஒரு தகவல் வெளியாகிவுள்ளது. அதாவது இப்படத்தில் ஒரு பாடல் மிகவும் ஸ்பெஷலாக உருவாகியுள்ளதாம். ஷங்கர் மஹாதேவன் மற்றும் கார்த்திக் பாடியுள்ள இப்பாடல் திரையில் ரசிகர்களை ஆட்டம்போட வைக்குமாம்.
யூத் படத்தில் இடம்பெற்ற ஆல்தோட்ட பூபதி பாடலை போல இப்பாடல் அமைந்துள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இந்த தகவல் விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.