சீனாவில் வேகமெடுக்கும் கொரோனா… இந்தியாவில் மீண்டும் லாக்டவுன்?

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவி்ல் வேகமெடுக்க தொடங்கிய கொரோனா எனும் கொடிய வைரஸ் மெல்ல, மெல்ல பல்வேறு நாடுகளுக்கு பர வி ஒட்டுமொத்த உலகையே வாட்டி வதைத்தது. அமெரி்க்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில், இத்தாலி, ரஷியா உள்ளிட்ட நாடுகளில் லட்சக்கணக்கான உயிர்களை கொரோனா பலி கொண்டது.

அலை 1,2,3 என்று அடுத்தடுத்து எழுந்த அலைகளில் கொத்து கொத்தாக லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோகின. இதனால் உலகெங்கும் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்க, உலகின் பல்வேறு நாடுகளிலும் பொதுமுடக்கம் (Lockdown) அமல்படுத்தப்பட்டும், தடுப்பூசி செலுத்தப்பட்டும் குடிமக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. கொரோனாவின் கோரபிடியில் சிக்கி, கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் அவஸ்தைக்கு பிறகு 2021 இறுதியில் உலக நாடுகள் ஒரு வழியாக இயல்பு நிலைக்கு திரும்பின.

இந்த நிவையில், ஓராண்டு இடைவெளிக்கு பிறகு தற்போது 2023 ஆங்கில புத்தாண்டு பிறப்புக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் சீனாவில் மீண்டும் பரவ தொடங்கி உள்ள உருமாறிய ஓமைக்ரான் வகை கொரோனா (BF -7) உலக மக்களின் தூக்கத்தை மீண்டும் கலைத்து, அவர்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

அதுவும் இனிவரவிருக்கும் நாட்களில் சீனாவில் இந்த கொரோனாவின் தாக்கமும், அதன் விளைவாக நாள்தோறும் நிகழ உள்ளதாக கணிப்பட்டுள்ள உயிரிழப்புகளும் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டு மக்களை பீதி உறைய செய்துள்ளது.

சீனாவில் அதிவேகமாக பரவிவரும் கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்து வருகிறது. குஜராத், ஒடிசா உள்ளி்ட்ட மாநிலங்களில் BF -7 ஓமைக்ரான் வகை உருமாறிய கொரோனா தொற்று சிலருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கைகளை மீண்டும் அமல்படுத்த தொடங்கி உள்ளன. இதன்படி, பொது இடங்களில் மக்கள் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, வெளிநாடுகளில் இருந்துவரும் விான பயணிகளை சோதனைக்கு உட்படுத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிககைகளை மேற்கொள்வது தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழ்நாடு உள்ளிட் ட மாநிலங்கள் இன்று வெளியிட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறை உயரதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். அதனை தொடர்ந்து, கொரோனா பரவல் தடுப்பு தொடர்பான மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி முககவசம், சமூக இடைவெளி என்று கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், இதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் மீண்டும் பொதுமுடக்கம் (Lockdown) அமல்படுத்தப்படுமா என்ற அச்சம் கலந்த கேள்வி பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, இந்திய மருத்துவ சங்கம் அளித்துள்ள விளக்கத்தில், ” சீனாவில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளதால், இந்தியாவிலும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று நாம் அச்சம் கொள்ள தேவையில்லை. ஏனெனில் பிற நாட்டினரைவிட ஒப்பீட்டளவில் இந்தியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். அத்துடன் இந்தியாவில் 95% பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது. எனவே, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளையும் மேற்கொண்டால் சீனா அளவுக்கு இந்தியாவில் கொரோனா பரவாது. பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் அவசியமும் ஏற்படாது” என்று இந்திய மருத்துவ சங்கம் பொதுமக்களுக்கு தைரியம் கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.