பெங்களூரு, தங்களின் தொகுதியில் போட்டியிட, பலரும் சீட் கேட்பது காங்கிரசின், பல எம்.எல்.ஏ.,க்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. சீட்டுக்கு விண்ணப்பம் பெறுவது சரியல்ல என, முணுமுணுக்கின்றனர்.
சட்டசபை தேர்தலுக்கு, காங்கிரஸ் தயாராகி வருகிறது. போட்டியிட விரும்புவோரிடம், விண்ணப்பம் கோரப்பட்டது.
விண்ணப்ப படிவங்களுக்கு, 2 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. கட்டணம் வசூலிப்பது குறித்து, ஆட்சேபனை எழுந்தாலும், அதிக எண்ணிக்கையில் சீட் கேட்டு, விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளனர்.
இன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உள்ள தொகுதிகளிலும் கூட, விண்ணப்பம் பெறுவதால், காங்., மேலிடத்தின் மீது எம்.எல்.ஏ.,க்கள் கோபமடைந்துள்ளனர். இது சரியல்ல என, முணுணுக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன், பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் நடந்த காங்., – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திலும், இதுபற்றி பகிரங்கமாகவே குற்றம் சாட்டினர்.
‘போட்டியிட நாங்கள் இருக்கும் போது, சீட் கோரி வரும் விண்ணப்பங்களை பெறுவது சரியல்ல.
‘சீட்டுக்காக விண்ணப்பித்தவர்கள், தாங்களே அடுத்த வேட்பாளர் என, கூறிக்கொண்டு திரிகின்றனர். இது தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறது’ என எரிச்சல் படுவதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement