வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சாவ் பாலோ: பீலே உடல் நிலை மோசமாக உள்ளது. இவரது சிறுநீரகம், இருதயம் பாதிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே, 82. மூன்று முறை உலக கோப்பை (1958, 1962, 1970) வென்ற அணியில் இடம் பெற்றவர். பிரேசில் அணிக்காக 77 கோல் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 1,363 போட்டிகளில் 1,281 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். சிறுநீரகத்தில் இருந்த கற்களை அகற்ற ‘ஆப்பரேஷன்’ செய்த இவரது, பெருங்குடலின் வலது பக்கத்தில் ‘கேன்சர்’ கட்டி இருந்தது கண்டறியப்பட்டது.
உடனடியாக ஆப்பரேஷன் செய்து கட்டி அகற்றப்பட்டது. பின் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் இருந்து மீண்ட பீலே, சமீபத்தில் சாவ் பாலோவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். ‘கேன்சர்’ சிகிக்கைக்காக இவருக்கு ‘கீமோதெரபி’ சிகிச்சை தரப்பட்டது. பின் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் அவதிப்பட, தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.
![]() |
பீலே விரைவில் குணமடைய வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் பிரார்த்தனைகள் குவிகின்றன. இதனிடையே ‘கேன்சர்’ பாதிப்பு அதிகரித்துள்ளது. சிறுநீரகம், இருதயம் பாதிக்கப்பட்டுள்ளது. இவரது உடல்நிலை அபாய கட்டத்தில் உள்ளது. இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
பீலே மகள் கெலி நாசிமென்டோ கூறுகையில்,” டாக்டர்கள் தரப்பில் பல்வேறு காரணங்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து மருத்துவமனையில் தங்குவது தான் சிறந்தது. இங்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படுகிறது,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement