முதியவர் ஒருவரின் வெறியாட்டம்… பாரிஸ் நகரம் மொத்தமாக முடக்கம்


பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதுடன் நால்வர் காயங்களுடன் தப்பியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

முதியவர் ஒருவர் கைது

அந்த சம்பவம் தொடர்பில் 69 வயதிருக்கலாம் என கருதப்படும் முதியவர் ஒருவர் கைதாகியுள்ளார்.
குறித்த அதிர்ச்சி சம்பவமானது நகரின் 10வது வட்டாரத்தில் நடந்துள்ளது.

முதியவர் ஒருவரின் வெறியாட்டம்... பாரிஸ் நகரம் மொத்தமாக முடக்கம் | Paris Mass Shooting City Locked Down

@getty

உள்ளூர் பத்திரிகை ஒன்று வெளியிட்ட தகவலில், இந்த பயங்கர சம்பவமானது குர்திஷ் கலாச்சார மையம் அஹ்மத்-காயாவில் நடந்தது என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், விசாரணை முன்னெடுக்கப்படு வருவதால், சம்பவம் நடந்த பகுதியை மக்கள் தவிர்க்கவேண்டும் என பாரிஸ் பொலிசார் கேட்டுகொண்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நபர் ரயில் சேவை நிறுவனம் ஒன்றில் சாரதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, கைது நடவடிக்கையின் போது அந்த நபரிடம் இருந்து பயன்படுத்திய துப்பாக்கியை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

விசாரணை துவக்கம்

மேலும், கொலை விசாரணை, திட்டமிட்டு படுகொலை செய்தல், காட்டுமிராண்டித்தனமாக பொதுவெளியில் நடந்துகொள்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர் மீது விசாரணை துவக்கப்பட்டுள்ளது.

முதியவர் ஒருவரின் வெறியாட்டம்... பாரிஸ் நகரம் மொத்தமாக முடக்கம் | Paris Mass Shooting City Locked Down

@getty

ஆயுததாரி தொடர்பில் மேலதிக தகவல்களை பொலிசார் வெளியிட மறுத்துள்ளதுடன், அவரது புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் நீதிமன்ற அனுமதியுடன் வெளியிடப்படும் என கூறியுள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.