வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காத்மாண்டு: பிரபல சர்வதேச கொலையாளி சார்லஸ் சோப்ராஜ், நேபாள நாட்டு சிறையில் இருந்து, இன்று விடுதலை செய்யப்பட்டார். உடனடியாக பிரான்சிற்கு நாடு கடத்தப்பட்டார்.
இந்தியாவை சேர்ந்த ஆணுக்கும், தென்கிழக்காசிய நாடான வியட்நாமைச் சேர்ந்த பெண்ணுக்கும் 1944ல் பிறந்தவர் சார்லஸ் சோப்ராஜ் இவன் மீது உலகின் பல நாடுகளில் 20க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளன. இந்தியா உட்பட பல நாடுகளின் சிறைகளில் அடைக்கப்பட்டான்.
![]() |
நேபாளத்தில் 1975ல் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்ணை கொலை செய்த வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அந்நாட்டின் காத்மாண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது 78 வயதாகும் சோப்ராஜை, முதுமை மற்றும் நன்னடத்தை காரணமாக நேபாள உச்ச நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன் விடுதலை செய்து உத்தரவிட்டதுடன் பிரான்சிற்கு நாடு கடத்த உத்தரவிட்டது. இதையடுத்து 19 ஆண்டு சிறைவாசத்திற்கு பின் இன்று விடுதலையானார் .கோர்ட் உத்தரவுபடி நேற்று இரவோடு இரவாக பிரான்சுக்கு நாடு கடத்தப்படுகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement