49 ஆண்டுகளுக்கு பின்பும் வீரியம் குறையாமல் இருக்கிறது பெரியாரியம்: முதல்வர் ஸ்டாலின் 

சென்னை: 49 ஆண்டுகளுக்கு பின்பும் பெரியாரியம் வீரியம் குறையாமல் இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சாலை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுப்ப பதிவில்,” தந்தை பெரியாரின் 49-ஆவது நினைவுநாள். வாழ்ந்தபோது எதிரிகளுக்கு சிம்மசொப்பனம். நிறைந்து 49 ஆண்டுகளான பின்பும் வீரியம் குறையாமல் இருக்கிறது பெரியாரியம்; ஆரியம் கற்பிக்கும் ஆதிக்கத்தை அது சாய்த்தே தீரும்! Periyar is more than flesh. He’s an idea. And his ideas are timeproof.” இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.