முல்லைத்தீவு மாவட்டத்தில் தொழில் வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் நேக்கில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு (23) முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட செயலக மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தொழில் வாய்ப்பிற்கு தேவையான உள ஆற்றலை மேம்படுத்துவது எவ்வாறு, நேர்முகப் பரீட்சையை எதிர்கொள்வது எவ்வாறு, தொழில்வாய்ப்பில் இணைவது எவ்வாறு போன்ற விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
கல்விப் பொதுத்தராதார உயர்தரம் மற்றும் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களுக்கான தனியார் துறைகளில் காணப்படுகின்ற வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பும் நேர்முகத்தேர்வும் இதன்போது இடம்பெற்றது.
இக் கருத்தரங்கின் வளவாளர்களாக யாழ் மாவட்ட செயலக மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் து.துஷிராஜ் கலந்து கொண்டார்.
இந்த கருத்தரங்கினை மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) க.கனகேஸ்வரன்இ மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.குணபாலன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு ஆரம்பித்துவைத்தனர்.