தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக பல ரசிகர்களின் இதயத்தை கொள்ளைகொண்டவர் நடிகை மீனா. தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு போண்டா மொழிப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜயகாந்த், ரஜினி, கமல், விஜய், அஜித், அர்ஜுன், முரளி போன்ற நடிகர்களின் படத்தில் நடித்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் சில வலுவான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார், இது தவிர சில தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று இருக்கிறார். இப்படி பிசியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்து வந்த நடிகைக்கு, அவரது கணவரின் மரணம் பேரிடியாக விழுந்தது.
சமீபத்தில் மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு பரிதமாக உயிரிழந்தார், தனது கணவனின் மரணத்திற்கு பிறகு மீனா சோகத்தில் முடங்கிவிட்டார். இருண்ட உலகத்திற்குள் சென்றுவிட்ட இவரை மீட்டு கொண்டுவர மீனாவின் தோழிகளும், சக நடிகர் நடிகைகளும் கடும் முயற்சிகளை செய்து இவரை ஓரளவு பழைய நிலைக்கு கொண்டு வந்து விட்டனர். சில மாதங்களுக்கு முன்னர் மீனாவின் பெற்றோர்கள் அவருக்கு இரண்டாம் திருமணம் செய்துவைக்க மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும், அவர் இரண்டாம் திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும் சில செய்திகள் இணையதளத்தில் வட்டமடித்தது.
அதன் பின்னர் இந்த தகவல் உண்மையல்ல என்பதை நடிகை மீனா விளக்கினார் மற்றும் தனது பெற்றோர்கள் அப்படி ஏற்பாடு எதுவும் செய்யவில்லை என்றும், அவர்கள் இப்போது என் மகளை கவனிப்பதில் தான் பிசியாக இருக்கிறார்கள் என்று கூறி தன்னை பற்றி பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் தற்போது மீனா மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார், ஒரு படப்பிடிப்புக்காக அவர் அறையில் அமர்ந்து மேக்கப் போட்டுக்கொள்ளும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். மீண்டும் மீனா பழைய நிலைக்கு திரும்பியதை கண்டு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.