திருப்பதி : திருப்பதி போலீசார் சார்பில் திஷா செயலி குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருப்பதி மாவட்ட எஸ்பி பரமேஸ்வர் உத்தரவின்பேரில், பெண்களுக்கு பாதுகாப்பை அளிக்கும் திஷா செயலி குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு போலீசார் ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி திருப்பதி காய்கறி மார்க்கெட், கோயில்கள், ரயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று ஏற்படுத்தப்பட்டது. இதில், பெண்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் மற்றும் புலப்படும் காவல் துறையில் திஷா சட்டத்தின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு பெண்ணும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்வது முக்கியமான அவசர தேவையின் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சைபர் குற்றங்கள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.