டெல்லி: ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் பங்கேற்பது அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தும் என பலர் கூறினார்கள், ஆனால் எனது மனசாட்சியை கேட்டு பயணத்தில் கலந்துகொள்ள முடிவு செய்தேன் என டெல்லியில் நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார். என்னைப் பொறுத்தவரை இந்திய ஒற்றுமைப் பயணம் என்பது ஒரு தொடக்கம்தான். அரசியலமைப்புச் சட்டத்திற்கு நெருக்கடி வரும்போது எந்த கட்சி ஆட்சியாக இருந்தாலும் போராட்டத்தில் இறங்குவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
