கிருஷ்ணர் பிறந்த இடத்தில் மசூதி..தொல்லியல் துறை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு.!

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள உள்ளூர் நீதிமன்றம், கிருஷ்ண ஜென்மபூமி அல்லது கிருஷ்ணர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் ஷாஹி இத்கா மசூதியை ஜனவரி 2ஆம் தேதிக்குப் பிறகு இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜனவரி 20க்குப் பிறகு அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

வலதுசாரி அமைப்பான இந்து சேனாவின் விஷ்ணு குப்தா தாக்கல் செய்த வழக்கின் மீது நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இது வாரணாசியின் ஞானவாபி மசூதியில் “சிவ்லிங்கம்” கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட கணக்கெடுப்பைப் போன்றதாக இருக்கும் என்று விஷ்ணு குப்தா தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 20ஆம் தேதிக்கு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

கிருஷ்ணர் பிறந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாகக் கூறி, 17ஆம் நூற்றாண்டின் ஷாஹி இத்கா மசூதியை கத்ரா கேசவ் தேவ் கோவிலில் இருந்து அகற்றக் கோரி இந்து அமைப்புகள் தொடர்ந்த வழக்குகளில் இதுவும் ஒன்று. ஷாஹி இத்கா மசூதி, 1669-70ல் முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில் கிருஷ்ண ஜென்மபூமியில் கத்ரா கேசவ் தேவ் கோவிலின் 13.37 ஏக்கர் வளாகத்தில் கட்டப்பட்டது என்று விஷ்ணு குப்தாவின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

விஷ்ணு குப்தாவின் வழக்கறிஞர் ஷைலேஷ் துபே, டிசம்பர் 8 அன்று, டெல்லியைச் சேர்ந்த குப்தா, இந்து சேனாவின் தேசியத் தலைவர் மற்றும் அதன் துணைத் தலைவர் சுர்ஜித் சிங் யாதவ் ஆகியோர் நீதிமன்றத்தில் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாகக் கூறினார். கிருஷ்ணர் பிறந்தது முதல் கோவில் கட்டுவது வரை உள்ள முழு வரலாற்றையும் அவர் நீதிமன்றத்தில் சமர்பித்தார். 1968ஆம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மஸ்தான் சேவா சங்கத்திற்கும், ஷாஹி இத்காவிற்கும் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தை சட்டவிரோதமானது என்று கூறி ரத்து செய்ய வேண்டும் என்றும் துபே கோரியுள்ளார்.

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இருந்தபடியே, எந்த வழிபாட்டுத் தலத்தின் மத அந்தஸ்தையும் பராமரிக்கும் 1991ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை ஏற்க முடியாது என்று மதுராவில் உள்ள சிவில் நீதிமன்றம் முன்பு வழக்கை தள்ளுபடி செய்தது குறிப்பிடதக்கது.

முஸ்லீம்களே வெளிநாடுக்கு செல்லுங்கள்..இங்கு பாதுகாப்பு இல்லை..பீகார் தலைவர் பேச்சு.!

அயோத்தி கோவில்-மசூதி வழக்கு வழிபாட்டு தலங்கள் சட்டத்தின் விதிவிலக்கும். 16 ஆம் நூற்றாண்டின் பாபர் மசூதி, 1992 இல் இந்து ஆர்வலர்களால் இடித்து அழிக்கப்பட்டது. இது ஒரு பழங்கால கோவிலின் இடிபாடுகளில் கட்டப்பட்டது என்று இடித்து தள்ளிய இந்து ஆர்வலர்கள் நம்பினர். பிரமாண்ட ராமர் கோவிலுக்காக மசூதி இடத்தை இந்துக்களிடம் ஒப்படைத்து, மசூதி கட்டுவதற்கு மாற்று நிலத்தை 2019ல் உச்ச நீதிமன்றம் வழங்கியது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.