அமெரிக்ககாவில் பனிப்புயல்: 250 மில்லியன் அமெரிக்கர்கள் , கனேடியர்கள் பாதிப்பு

அமெரிக்காவை பாதித்துள்ள பனிப்புயல் காரணமாக இதுவரையில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த புயலினால் அமெரிக்காக மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த சுமார் 250 மில்லியன் மக்ககள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

புயலின் விளைவாக அமெரிக்காவில், 1.5 மில்லியன் மக்கள் ஏற்கனவே மின்சார துண்டிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெக்சாஸில் இருந்து கனடாவின் கியூபெக் சிட்டி வரை 3200 கிலோமீற்றர்களுக்கு பனிப்புயல் பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் சீரற்ற வானிலை நிலவுகிறது. கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இதனால்இ மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குளிர் மற்றும் பனிப்பொழிவு அதிகமாகி வருவதால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர்.

S 2இந்நிலையில், கடும் பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் அச்சம் காரணமாக அமெரிக்கா முழுவதும் விமான சேவைகளை விமான நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன. இன்று (24) 5,900 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் பனிப்பொழிவால் விமான சேவை தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

குளிர்மிக மோசமாக உள்ள நிலையில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என அந்தநாட்டு வானிலை நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

S 4பாம் புயல் குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி.ஜோபைடன் நீங்கள் சிறுவர்களாக, இருந்த போது பனி பெய்கிறது என்றால் உற்சாகம் அடைவீர்கள் ஆனால் தற்போது அது போல் இல்லை என்று எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. பாம் புயலால் நியூ ஹாம்சயர் கடற்கரையில் ராட்சத அலைகள் கரைகளை தாக்குகிறது. இதனால் கடற்கரை நகரங்களில் கடல் நீர் புகுந்திருக்கிறது.

மேலும் அமெரிக்காவின் டெக்சாஸ், லூசியானா, ஆல்பமா மற்றும் புளோரிடா மாகாணங்கள் ஆர்ட்டிக் சூறாவளி தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. கடும் குளிர், பனிப்பொழிவு இகடற்கரை நகரங்களில் வெள்ளம் காரணமாக அமெரிக்காவில் இதுவரை 60% மக்கள் பாதிக்க பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.