
மீண்டும் நடிக்கத் தொடங்கினார் மீனா
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 90களில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீனா.
மீனா பெங்களூருவை சேர்ந்த மென் பொறியாளர் வித்யாசாகர் என்பவரை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நுரையீரல் பிரச்சனை ஏற்பட்டதையடுத்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மரணம் அடைந்தார் வித்யாசாகர். 48 வயதே ஆன வித்யாசாகரின் மரணம் ஒட்டு மொத்த சினிமாத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
வித்யாசாகர் மறைவை தொடர்ந்து நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்த மீனா இப்போது மீண்டும் நடிக்க வந்து விட்டார். தற்போது ஒரு விளம்பரப் படத்தில் நடிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார் மீனா. அதில் அவர் பழைய உற்சாகத்தோடு நடிப்பது பதிவாகி உள்ளது. மீனாவின் கம்பேக்கிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.