ஸ்ரீநகர், ஜம்மு – காஷ்மீரில், பிரிவினைவாத இயக்க தலைவரான மறைந்த கிலானி வீடு உட்பட 122 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டன.
ஜம்மு – காஷ்மீரில் ஜமாத்தே – இ – இஸ்லாமி என்ற பிரிவினைவாத அமைப்பின் தலைவராக இருந்த சையத் அலி ஷா கிலானி, தெஹ்ரிக் – இ – ஹூரியத் என்ற அரசியல் கட்சியையும் நடத்தி வந்தார்.
இவர், பாகிஸ்தானுக்கு ஆதரவாக நம் நாட்டில் பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதையடுத்து, ஜமாதி – இ – இஸ்லாமி அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இந்நிலையில், எஸ்.ஐ.ஏ., எனப்படும் ஜம்மு – காஷ்மீரின் மாநில புலனாய்வு அமைப்பு, புல்வாமா, குல்காம், பட்கம் மற்றும் ஸ்ரீநகர் மாவட்டங்களில் உள்ள கிலானியின் வீடு உள்ளிட்ட 122.89 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நேற்று முடக்கியது.
கடந்த 1929ல் ஜம்மு – காஷ்மீரின் சோபோர் நகரில் பிறந்த கிலானி, கடந்த ஆண்டு செப்டம்பரில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இவர், ஜம்மு – காஷ்மீரின் சோபோர் தொகுதியில் இருந்து மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement