சென்னை: மதிமுக பொதுச் செயலாளர்வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: அரசுப் பள்ளிகளில் 10 ஆண்டுகளாக உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை உள்ளிட்ட பாடங்களை கற்பிக்கும் வகையில் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யுமாறு பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர்.
இவர்கள் வறுமையில் இருந்து விடுபட, அவர்களின் கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி கருணையோடு பரிசீலனை செய்ய வேண்டும். தைத்திருநாள் பொங்கல் பரிசாக அவர்களை பணி நிரந்தரம் செய்து, 12 ஆயிரம் குடும்பங்களில் விளக்கேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.