தமிழ் சினிமாவில் தளபதியாக ரசிகர்களின் மனதில் நிலைத்திருப்பவர் நடிகர் விஜய். தற்போது வம்சியின் இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இப்படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடிக்க தமன் இசையமைத்துள்ளார். மேலும் சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்திலிருந்து ரஞ்சிதமே, தீ தளபதி ஆகிய பாடல்கள் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து சமீபத்தில் அம்மா செண்டிமெண்ட் பாடல் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தது.
Varisu: விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி..அந்த இரண்டு மட்டும் கிடைச்சா போதும் நண்பா..!
இதையடுத்து நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். விஜய் வழக்கம் போல தன் குட்டி ஸ்டோரியை கூறி ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தார்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சரத்குமார் பேசுகையில், விஜய் தான் எதிர்காலத்தில் சூப்பர்ஸ்டார் என நான் சூர்யவம்சம் படத்தின் வெற்றி விழாவில் கூறினேன். அது இப்பொது நடந்துவிட்டது.
நான் அந்த சமயத்தில் விஜய் தான் எதிர்காலத்தில் சூப்பர்ஸ்டாராக வருவார் என சொன்னவுடன் கலைஞரே ஆச்சரியப்பட்டார் என கூறினார் சரத்குமார். இவரின் பேச்சுக்கு அரங்கமே அதிர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.