புதுடில்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில், இன்று(டிச.,25) ஜனாதிபதி, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி, நிதியமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்:
பிறப்பு:
அடல் பிஹாரி வாஜ்பாய் டிசம்பர் 25, 1924ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரில் பிறந்தார். 1947ல் வாஜ்பாய் ஆர்.எஸ்.எஸ்.சில் இணைந்தார். 1996ல் 13 நாட்கள் பிரதமராக முதன் முதலாக பதவியில் இருந்தார்.

விருதுகள்:
1998-2004 வரை பிரதமராக இருந்த வாஜ்பாய் காங்., இல்லாத ஒருவர் முழு பதவிக்காலத்தை நிறைவு செய்த பெருமையை பெற்றார். 47 ஆண்டுகள் எம்பி.,யாக இருந்தவர். இவருக்கு பத்மவிபூஷண், பாரத ரத்னா உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்றார்.

இறப்பு:
வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தேசிய 4 வழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு அளப்பரிய வளர்ச்சியை இந்தியா பெற்றது. கடந்த 2018ல் தனது 93வது வயதில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்.

தலைவர்கள் மரியாதை:
மறைந்த முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 98-ஆவது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் இன்று(டிச.,25) கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி டில்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில், இன்று(டிச.,25) ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement