விஜய் தற்போது வம்சியின் இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் ராஷ்மிகா விஜய்க்கு ஜோடியாக நடிக்க தமன் இசையமைத்துள்ளார். இதைத்தொடர்ந்து சரத்குமார், ஷ்யாம், பிரகாஷ் ராஜ், பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வழக்கமான விஜய் படங்களை போல இல்லாமல் வாரிசு சற்று மாறுபட்டு இருக்கும் என்ற தகவலினால் ரசிகர்கள் இப்படத்தை காண ஆவலாக இருக்கின்றனர். மேலும் இப்படத்திலிருந்து வெளியான ரஞ்சிதமே, தீ தளபதி போன்ற பாடல்களின் வரவேற்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாகியுள்ளது.
Varisu: வாரிசு இசை வெளியீட்டு விழா..அரசியல் பேசாத விஜய்..இதுதான் காரணமா ?
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் விஜய்யின் குட்டி ஸ்டோரி, அவர் ரசிகர்களிடம் செலுத்திய அன்பு போன்ற தருணங்கள் ஹைலைட்டாக அமைந்தன. பலர் இதில் கலந்துகொண்டு விஜய்யை புகழ்ந்து தள்ளினர்.
மறுபடியும் போலீஸ் கேரக்டர் ஏன்? Aakrosham Movie Team Interview
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
குறிப்பாக இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பேசியது தற்போது மேலும் அஜித் ரசிகர்களை சீண்டியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு தில் ராஜு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் விஜய் தான் நம்பர் ஒன் ஸ்டார். அவரின் படத்திற்கு தான் அதிக திரையரங்கங்கள் கிடைக்கவேண்டும் என பேசி இருந்தார்.
இது அஜித் ரசிகர்கள் உட்பட சில திரைபிரபலங்களையும் கோபமடைய செய்தது. இந்நிலையில் தற்போது வாரிசு இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில், பொங்கலுக்கு வாரிசு படம் கண்டிப்பாக வெற்றி பெரும். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் வாரிசு வெற்றிபெறும் என கூறியிருந்தார்.
ஆனால் துணிவு படத்தின் இயக்குனர் வினோத் வாரிசு மற்றும் துணிவு இரண்டு படங்களும் வெற்றி பெறவேண்டும் என பேசியிருந்தார். இந்நிலையில் வினோத் பெருந்தன்மையாக இரண்டு படங்களும் வெற்றிபெறவேண்டும் என பேசிய நிலையில் தில் ராஜு இவ்வாறு பேசியது தவறு என சிலர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது