தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிகர்களில் ஒருவர் தான் தனுஷ். கமர்ஷியல் படங்களாக இருந்தாலும் சரி, வித்யாசமான படங்களாக இருந்தாலும் சரி அனைத்திலும் தன் அசாத்திய நடிப்பு திறனை வெளிப்படுத்தி ரசிகர்களை அசத்தி வருகின்றார் தனுஷ்.
மேலும் தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவராக வலம் வருகின்றார். இருப்பினும் சமீபகாலமாக தனுஷ் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தார். அவரின் திரைப்படங்கள் தொடர்ந்து OTT யில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் இருந்தது.
Varisu: மீண்டும் அஜித்தை சீண்டிய வாரிசு தயாரிப்பாளர்..விளாசும் அஜித் ரசிகர்கள்..!
அந்த சமயத்தில் தான் திருச்சிற்றம்பலம் திரைப்படம் அவருக்கு கைகொடுத்தது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
மறுபடியும் போலீஸ் கேரக்டர் ஏன்? Aakrosham Movie Team Interview
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இதைத்தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தனுஷ் தற்போது அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகின்றார்.
இதையடுத்து இயக்குனர் வினோத்தின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. தற்போது இப்படத்தைப்பற்றிய தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதாவது தனுஷ் மற்றும் வினோத் இணையும் படத்தில் தனுஷ் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளாராம். தனுஷ் தன் திரைப்பயணத்தில் இதுவரை போலீசாக நடித்ததே இல்லை. தற்போது முதல்முறையாக வினோத்தின் இயக்கத்தில் தனுஷ் போலீசாக நடிக்கவுள்ளார். எனவே இப்படத்தின் மீது தற்போதே ரசிகர்களுக்கு ஆவல் தூண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.