வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாரிஸ்:பாரிஸ் நகரில் குர்திஷ் இனத்தவர்கள் மீது வெள்ளிக்கிழமை நடந்த கொடிய தாக்குதலுக்குப் பிறகு இரண்டாவது நாளாக வன்முறை அமைதியின்மை காணப்பட்டது.நேற்று திரண்ட எதிர்ப்பாளர்கள் கார்களை கவிழ்த்தனர், சிலவற்றை தீ வைத்து எரித்தனர், மற்றும் பொருட்களை போலீசார் மீது வீசினர். இதற்கு பதிலளித்த அதிகாரிகள் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

குர்திஷ் கலாச்சார மையம் மற்றும் உணவகம் ஆகியவற்றில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.தன்னை இனவாதி என வர்ணித்த சந்தேக நபர், மனநல காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.69 வயதான அவர் சனிக்கிழமை பரிசோதனையைத் தொடர்ந்து உடல்நலக் காரணங்களுக்காக காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். அவர் இன்னும் நீதிபதி முன் ஆஜராகவில்லை.

இதனையடுத்து போராட்டக்காரர்கள் பாதுகாப்பு வளையத்தை உடைக்க முயன்றதால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மக்கள் தெருக்களில் தீ மூட்டுவதையும், கார் கண்ணாடிகளை உடைத்தும் வருகின்றனர். இந்நிலையில் 31 அதிகாரிகள் மற்றும் ஒரு எதிர்ப்பாளர் காயமடைந்துள்ளதாகவும், 11 பேர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement