‘ஹோண்டா’ கார்களை வாங்குவதற்காக எளிதான, மலிவான மற்றும் கவர்ச்சிகரமான நிதித் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் ‘ஹோண்டா கார்ஸ் இந்தியா’ நிறுவனம், ‘இந்தியன் வங்கி’யுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இதன் வாயிலாக, நியாயமான வட்டி விகிதம், எளிதான கடன் வசதி, சிறப்பு சலுகைகள் என பல அம்சங்களுடன் கூடிய நிதித் திட்டத்தினை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது, ஹோண்டா நிறுவனம்.
இதுகுறித்து, இந்நிறுவனத்தின் துணைத் தலைவர் குணால் பேல் கூறியதாவது:
ஹோண்டா நிறுவனம், எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளித்து,அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.
இந்தியன் வங்கியுடனான இந்த ஒப்பந்தமானது, ஹோண்டாவின் சிறந்த உரிமையாளர் அனுபவம் மற்றும் சேவைகளை வழங்கும் உறுதிப்பாட்டை சுட்டிக்காட்டுகிறது. வாகனத் துறைக்கும், ஹோண்டா நிறுவனத்துக்கும் 2023ம் ஆண்டு, இந்த ஆண்டைப் போல வளமான ஆண்டாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement