FIFA உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் கோல் செல்லாது என்ற விமர்சங்களுக்கு மத்தில் அப்போட்டியின் நடுவர் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரான்ஸ் கால்பந்து ரசிகர்கள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியை மீண்டும் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள நிலையில், மெஸ்ஸி அடித்த கோல் செல்லாது என எழுந்துள்ள விமர்சங்களுக்கு, போட்டியின் நடுவர் சைமன் மார்சினியாக் ஒரு தனித்துவமான முறையில் பதிலளித்தகதுள்ளார்.
அவரது பதில் ரசிகர்களில் அதிர்ச்சிக்கு உள்ளாகியது, மேலும் அவரது பதில் மெஸ்ஸி மீதான பெரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது.
பிரான்ஸ் ரசிகர்கள் கோரிக்கை
மெஸ்ஸி தனது அணிக்காக மூன்றது கொலை அடித்தபோது, வெளியில் இருந்த அர்ஜென்டினா அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் மைதானத்திற்குள் நுழைந்துவிட்டதாகவும், இதனால் அந்த கோல் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும், இதை சரியாக கவனிக்காமல் விட்ட நடுவர் தவறு செய்துவிட்டதாகவும் குற்றசாட்டுகளை முன்வைத்து, இதன் காரணமாக 2022 உலக்கோப்பை இறுதிப்போட்டியை மீண்டும் நடத்த வேண்டும் என்றும் என்று பிரான்ஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோபத்துடன் கோரிக்கையை முன்வைத்துவருகின்றனர்.
36 ஆண்டுகள் கழித்து உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி தனது நாட்டில் இன்னும் அந்த கொண்டாட்டத்திலிருந்து வெளியே வராத இந்த சூழலில், இந்த குற்றச்சாட்டுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இப்போட்டிக்கு நடுவராக இருந்த போலந்து நாட்டைச் சேர்ந்த சைமன் மார்சினியாக் (Szymon Marciniak), அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார்.
பதிலடி கொடுத்த நடுவர்
பிரான்ஸ் ரசிகர்கள், மெஸ்ஸி கோல் அடிக்கும்போது 2 அர்ஜென்டினா வீரர்கள் மைதானத்திற்குள் நுழைந்த காட்சியை மட்டுமே எடுத்து வெளியிட்டு, நியாயம் கேட்கும் பிரான்ஸ் ரசிகர்களுக்கு பதிலடியாக, பிரான்ஸ் அணிக்காக கைலியின் எம்பப்பே கோல் போடும்போது பிரென்ச் வீரர்கள் 7 பேர் மைதானத்திற்குள் நுழைந்ததை அவர் ஆதாரபூர்வமாக படமெடுத்து காட்டியுள்ளார்.
2 அர்ஜென்டினா வீரர்கள் நுழைந்ததை கேட்ட பிரான்ஸ் ரசிகர்கள், 7 பிரெஞ்சு வீரர்கள் நுழைந்ததை பார்க்கவில்லையா என கேட்டுள்ளார்.
Szymon Marciniak, the referee for the World Cup Final, has responded to @lequipe’s criticism that Lionel Messi’s second goal shouldn’t have counted:
“The French didn’t mention this photo, where you can see how there are seven Frenchmen on the pitch when Mbappé scores a goal.” pic.twitter.com/MW6y73iiLN
— Zach Lowy (@ZachLowy) December 23, 2022
இதன்மூலம், மெஸ்ஸியின் கோல் செல்லாது, கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்றால், எம்பாப்பேவில் கொள்ளும் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என்பதை மறைமுகமாக கூறியுள்ளார் மார்சினியாக்.
அவரது பதில் இப்போது உலகம் முழுவதிலும் உள்ள உலகக்கோப்பை கலப்பினது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.