லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) தொடரில் அடுத்த ஆண்டு புதிதாக ஒரு அணி சேர்க்கப்படவிருப்பதாக லங்கா பிரீமியர் லீக் தொடரின் பணிப்பாளர் சமன்த தொடன்வில தெரிவித்துள்ளார்.
2023 தொடரில் வட மாகாணம் அல்லது வட மத்திய மாகாணத்தில் இருந்து புதிய அணி ஒன்றை பார்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை LPL தொடரின் இறுதிப் போட்டியில் Colombo Stars அணியை வீழ்த்தி தொடர்ந்து 3 ஆவது முறையாகவும் Jaffna Kings அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது..
Colombo Stars மற்றும் Jaffna Kings அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி(23) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.