வாஷிங்டன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூத்த அதிகாரி ரிச்சர்ட் வர்மாவை, அமெரிக்க வெளியுறவுத் துறையின் துணைச் செயலராக அதிபர் ஜோ பைடன் நியமித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ரிச்சர்ட் வர்மா, 54. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புத் துறையின் துணை செயலராக பணியாற்றியவர்.
இந்தியாவுக்கான அமெரிக்க துாதராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது சர்வதேச பொது கொள்கைக்கான தலைமை சட்ட அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இவரை அமெரிக்க வெளியுறவுத் துறையின் மேலாண்மை மற்றும் வளத்துறையின் துணைச் செயலராக அதிபர் ஜோ பைடன் நியமித்துள்ளார். அதிபரின் நியமனத்தை செனட் சபை ஏற்றுக்கொண்டால், அமெரிக்க வெளியுறவுத் துறையின் உயர் பதவி வகிக்கும் இந்தியர் என்ற பெருமை, ரிச்சர்ட் வர்மாவுக்கு கிடைக்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement