உத்தரபிரதேசத்தில் 100 பேர் தாய்மதம் திரும்பினர்; பாஜக எம்எல்ஏ ஹேப்பி.!

மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்தது முதலாக பல்வேறு வலதுசாரி அமைப்புகள் புத்துயிர் பெற்று எழுந்தன. இதன் தொடர்ச்சியாக, கிறிஸ்தவம், இஸ்லாம், பெளத்தம் உள்ளிட்ட மதங்களில் இருந்து இந்து மதத்துக்கு திரும்பும்படி அந்த அமைப்புகள் வெளிப்படையாகவே அறைக்கூவல் விடுத்தன.

மேலும், இதற்கு தாய் மதம் திரும்புதல் என்ற பெயரையும் அந்த அமைப்புகள் வைத்தன. உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த தாய் மதம் திரும்புதல் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

தமிழகம், கேரளா உள்ளிட்ட பாஜகவால் காலூன்ற முடியாத மாநிலங்களில் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக தாய் மதம் திரும்புதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. குறிப்பாக, சென்னையில் 2015-ம் ஆண்டு முதன்முறையாக இந்து மக்கள் சார்பில் தாய் மதம் திரும்புதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 100 பேர் கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களில் இருந்து திரும்பியதாக அறிவிக்கப்பட்டது. அப்போது இது தமிழகத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்தநிலையில் உத்தரபிரதேசத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் தாய்மதம் திரும்பியுள்ளதாக பாஜக எம்எல்ஏ தெரிவித்துள்ளார். குர்ஜாவில் உள்ள 20 குடும்பங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமை இந்து மதத்தை ஏற்றுக்கொண்டதாக பாஜக எம்எல்ஏ கூறியுள்ளார். விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) ஏற்பாடு செய்திருந்த “கர் வாபசி” நிகழ்ச்சியின் போது மதமாற்றம் நடந்ததாக சமூக அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

“பல்வேறு மதங்களைச் சேர்ந்த 20 குடும்பங்களைச் சேர்ந்த 100-125 பேர் மகிழ்ச்சியுடன் ‘சனாதன் தர்மத்தை’ (இந்து மதம்) ஏற்றுக்கொண்டுள்ளனர்” என்று குர்ஜா எம்எல்ஏ மினாக்‌ஷி சிங் கூறினார். இந்த நிகழ்ச்சியில், சில தலைமுறைகள் அல்லது ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களின் சூழ்நிலை அல்லது குழப்பம் காரணமாக “சனாதன் தர்மத்தை” விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் இந்து சமுதாயத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

முஸ்லிம் மாணவர்களுக்கு ப்ரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப் எண்ணிக்கை குறைப்பு – அம்பலமான உண்மை!

இனிமேல் ஸ்ரீராமர், ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் பிற சனாதன கடவுள்கள் மற்றும் தெய்வங்களுக்கு பிரார்த்தனை செய்வதாக அவர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர், என்றும் அவர் கூறினார். மேலும் இந்த திட்டத்தில் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. சடங்குகள் நடத்தப்படுவதற்கு முன்பு அனைத்து குடும்பங்களும் பிரமாணப் பத்திரங்களில் ஒப்புதல் அளித்துள்ளன என்றும் எம்எல்ஏ கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.