மும்பை: துபாயில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் உர்பி ஜாவேத், மும்பை திரும்பிய நிலையில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்தார். பாலிவுட் நடிகை உர்பி ஜாவேத், சமூக வலைத்தளத்தில் அரை குறை உடையில் தனது ஆபாச புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவார். அவர், சில தினங்களுக்கு முன்பு துபாயில் நடக்கும் ஷூட்டிங்கில் பங்கேற்க சென்றார். அங்கு அவர் பொது இடத்தில் கவர்ச்சி உடையில் வீடியோ எடுத்ததால், அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தான் கைது செய்யப்படவில்லை என்றும், தொடர்ந்து ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறேன் என்று உர்பி ஜாவேத் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் அவர் துபாயில் இருந்து நேற்று மும்பை வந்து சேர்ந்தார். அப்போது அங்கிருந்த புகைப்படக்காரர்கள், அவரை சரமாரியாக புகைப்படம் எடுத்தனர். தொடர்ந்து துபாயில் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். கோபமடைந்த உர்பி ஜாவேத், ‘நான் சொல்ல வேண்டியதை ஏற்கனவே சொல்லிவிட்டேன்; மீண்டும் மீண்டும் என்னிடம் கேள்விக் கேட்காதீர்கள்’ என்றார். தொடர்ந்து புகைப்படக்காரர் ஒருவர், ‘உங்களது கையால் எப்போது சாப்பிடுவோம்’ என்று கேட்டார். அதற்கு பதிலளித்த உர்பி ஜாவேத், ‘ஏன் நான் உங்கள் மனைவியைப் போல இருக்கிறேன்? நான் ஏன் உங்களுக்கு உணவளிக்க வேண்டும்?’ என்று பதிலடி கொடுத்துவிட்டு ஆவேசமாக கிளம்பி சென்றார்.