காத்மாண்டு: நேபாளத்தில் இந்தியர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட நபர், மோதிஹாரி சவுதாடனோவில் வசித்து வந்த 45 வயதான ஷிவ பூஜன் யாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தெற்கு நேபாளத்தில் மகாகதிமை என்ற இடத்தருகே இரண்டு பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் 5 பேர் யாதவ் மீது துப்பாக்கியால் சுட்டனர் உடனே அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றும் போலீசார் கூறினர். இந்த கொலை தொடர்பாக ஒரு நபரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உத்தரகாண்டில் காளி நதியில் பாதுகாப்பு சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியர்கள் மீது நேபாளம் தொடர்ந்து 11-வது முறையாக தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஒரு இந்தியர் சுட்டு கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.