கோத்தகிரி: கோத்தகிரி குடியிருப்புக்குள் புகுந்த 2 காட்டுமாடுகள் ஆக்ரோஷமாக மோதின. இந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 2 காட்டு மாடுகள் ஆக்ரோஷமாக முட்டி மோதி சண்டையிட்டன.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்த குடியிருப்புவாசி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து வலைதளத்தில் பதிவிட்டார். அது தற்போது வைரலாகி வருகிறது. காட்டு மாடுகள் மக்களை தாக்கும் அபாயம் உள்ளதாகவும், அவைகளை அடர்ந்த வனத்துக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.