பிறந்த நாளில் பிணமாக கிடந்த அமெரிக்கர்! சோகத்தில் மூழ்கிய குடும்பம்


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பனிப்புயலில் சிக்கி 56 வயது நபர் பலியானார்.


கோர பனிப்புயல்

கடந்த 23ஆம் திகதி நள்ளிரவில் வில்லியம் ரோமெல்லோ க்ளே (56) என்ற நபர் காணாமல் போனார்.

மோசமான குளிர்கால சூழ்நிலையில் தனது வீட்டை விட்டு வெளியேறி கடைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ரோமெல்லோ க்ளே பனிப்புயலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

பெய்லி மற்றும் கென்சிங்டன் அவென்யூவில் பனியில் முகம் குப்புற புதைந்திருக்கும் இறந்த மனிதன் குறித்த வீடியோ கிறிஸ்துமஸ் ஈவ் அன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த நபர் க்ளே என்பது தெரிய வந்து அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர். மேலும் Buffalo வீதியில் இறந்து கிடந்த மூன்று பேரில் க்ளேவும் ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மற்ற இருவர் அடையாளம் காணப்படவில்லை. இதற்கிடையில் க்ளே தனது பிறந்தநாளிலேயே உயிரிழந்திருக்கிறார் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

பிறந்த நாளில் பிணமாக கிடந்த அமெரிக்கர்! சோகத்தில் மூழ்கிய குடும்பம் | Man Death Snowy On His Birthday Usa

 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.